கைதட்டலாமே என கேட்ட அமைச்சர்- பேரவையில் நடந்த ருசிகர சம்பவம்
viral
agriculture minister
panner selvam
funny talks
By Anupriyamkumaresan
தமிழக சட்டப்பேரவையில், வேளாண் துறை அமைச்சர், இன்று கரும்பு கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.2,750லிருந்து ரூ.2,900க்கு உயர்த்தி அறிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிதிநிலை கூட்டத்தொடரில் இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் உரையாற்றினார்.
அப்போது அவர் 2,750 ரூபாயிலிருந்த கரும்பு கொள்முதல் விலையை டன்னுக்கு 2,900 ரூபாயாக உயர்த்தி அறிவித்தார். அப்போது அவையில் இருந்தவர்களை பார்த்து கைதட்டலாமே, கரும்பு விவசாயிகளுக்கு ஊக்க தொகை உயர்ந்திருக்கிறதே இதற்கு கைதட்டலாமே என்று சிரித்தப்படி கேட்டுள்ளார்.
இதனை கேட்டதும் அவையிலிருந்தவர்கள் தங்களது கைகளை தட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.