வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
தமிழக சட்டப் பேரவையில் வேளாண் அறிக்கை மீதான விவாதங்களுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று பதிலளித்து பேசுகிறார்.
தமிழக சட்டப்பேரவை கடந்த 13ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் வருகின்ற 21தேதி வரை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் முன்கூட்டியே செப்டம்பர் 13-ஆம் நிறைவுபெறும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.
கடந்த 13ஆம் தேதி பொது பட்ஜெட் தாக்கல், 14ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் கடந்த 16 ஆம் தேதி முதல் பொது பட்ஜெட் மீதான விவாதம் நேற்றுவரை நடைபெற்றது.
இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வேளாண் அறிக்கை மீதான விவாதங்களுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று பதிலளித்து பேசுவார் .
வரும் 23ம் தேதி முதல் பல்வேறு துறைகளின் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் தொடரும் என்று தெரிகிறது. அத்துடன் இன்று மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.