வேளாண் பட்ஜெட் 2025: முக்கிய அம்சங்கள் என்னென்ன?

Tamil nadu DMK Budget 2025
By Vidhya Senthil Mar 15, 2025 06:29 AM GMT
Report

 தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ததை தொடர்ந்து இன்று 2025- 2026 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். 

வேளாண் பட்ஜெட் 2025: முக்கிய அம்சங்கள் என்னென்ன? | Agriculture Budget 2025 Key Features

 1. இயற்கை வேளாண்மையைப் பரவலாக்கும் செய்திடும் விதமாக 37 மாவட்டங்களில் மொத்தம் ரூ.12 கோடி நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும்.

2. தமிழ்நாட்டிலுள்ள மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 38,600 மாணவர்கள் உயிர்ம வேளாண் பண்ணைகளுக்கு ”கண்டுணர் சுற்றுலா” அழைத்து செல்லப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும.

3. ஆதிதிராவிடர், பழங்குடியின சிறு, குறு உழவர்களுக்கு 60 முதல் 70 % கூடுதல் மானியம் வழங்கப்படும். இதற்கு ரூ.21 கோடி நிதி ஒதுக்கீடு.

4. வேளாண்மையில் அதிக உற்பத்திக்கும், தொழில்நுட்பப் பயன்பாட்டிற்கும் மாநில அளிவில் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். ரூ.55 லட்சம் ஒதுக்கீடு.

5. சிறந்த உழவர்களுக்கு நம்மாழ்வார் விருது ரூ. 2 லட்சம் ரொக்கப் பரிசுடன் வழங்கப்படும்.

வேளாண் பட்ஜெட் 2025: முக்கிய அம்சங்கள் என்னென்ன? | Agriculture Budget 2025 Key Features

6. ஒரு லட்சம் உழவர்கள் பயன்பெறும் வகையில் குறைந்த நீர்த் தேவையுள்ள பயிர்களை ஊக்குவித்திட மாற்றுப்பயிர் சாகுபடித் திட்டம் ரூ.12 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் செயல்படத்தப்படும்.

7. 7 அரசு விதை சுத்திகரிப்பு நிலையங்கள், ரூ.15 கோடியே 5 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் புதியதாக நிறுவப்படும்.

8. பருத்தி உற்பத்திப் பெருக்குத் திட்டம் ரூ.12 கோடியே 21 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

9. 35 லட்சம் ஏக்கர் பரப்பிலான பயிர்களைக் காப்பீடு செய்யும் வகையில் ரூ.841 கோடி நிதியில் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

10. தமிழ்நாடு வேளாண்காடுகள் கொள்கை வெளியிடப்படும்.