பசுமை புரட்சியின் தந்தை என போற்றப்படும் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார்
இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் வேளாண் துறையின் மிகப்பெரிய விஞ்ஞானியான எம்.எஸ். சுவாமிநாதன் உடல்நிலை பாதிப்பு காரணமாக இன்று காலை காலமானார்.
எம்.எஸ்.சுவாமிநாதன்
மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் எனப்படும் எம்.எஸ்.சுவாமிநாதன் இந்தியாவின் தலைசிறந்த வேளாண் விஞ்ஞானிகளில் ஒருவராக போற்றப்படுபவர். இந்தியா மட்டுமின்றி உலக அளவிலும் புகழ்பெற்ற ஆய்வு நிலையங்களில் பேராசிரியராக, ஆராய்ச்சி நிர்வாகியாக தலைராக பல்வேறு பொறுப்புகளை எம்.எஸ்.சுவாமிநாதன் வகுத்துள்ளார்.
அது மட்டுமின்றி இந்திய அரசின் மத்திய வேளாண்மைத் துறைச் செயலாளராக இருந்த இவர், மத்திய திட்டக் குழு உறுப்பினர் போன்ற பதவிகளிலும் பணியாற்றி இருக்கின்றார். வேளாண் ஆராய்ச்சிகளுக்காக கொலம்பியா பல்கலைக்கழகத்தின் 'வால்வோ' விருது, ராமன் மகசேசே விருது என உலகளவில் 40-ற்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ள எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு உலகெங்கிலும் அமைந்துள்ள 38 பல்கலைக்கழகங்கள் கவுரவ டாக்டர் பட்டம் அளித்து சிறப்பித்துள்ளனர்.
வேளாண் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி உணவு உற்பத்தியில் இந்தியாவைத் தன்னிறைவு பெறவைத்த 98 வயதாகும் எம்.எஸ்.சுவாமிநாதன் இன்று வயது மூப்பின் காரணமாக உடல் நலக்குறைவினால் காலமானார். எம்எஸ் சுவாமிநாதன் மறைவுக்கு விஞ்ஞானிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் தேனாம்பேட்டையில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
எம்.எஸ்.சுவாமிநாதனின் மனைவி மீனா சுவாமிநாதன் எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளையின் முன்னாள் அறங்காவலராக இறந்தவர். இவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் காலமானார். எம்எஸ் சுவாமிநாதனுக்கு சவுமியா, மதுரா, நித்யாராவ் என்ற 3 மகள்கள், 5 பேரக் குழந்தைகள் உள்ளனர்.