ஓடும் காரில் சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - ஆக்ராவில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்!
ஆக்ராவில் சிறுமிக்குப் போதை மருந்து கொடுத்து ஓடும் காரில் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆக்ரா
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சமீபகாலமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. முக்கியமாக 5 வயது முதல் 17 வயது வரையிலான உள்ள பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் உள்ளது.
சமீபத்தில் கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது . இதற்காக நீதி கேட்டு தற்பொழுது வரை போராட்டம் வருகிறது. ஆனாலும் வட இந்தியாவில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில்,ஆக்ராவில் சிறுமிக்குப் போதை மருந்து கொடுத்து ஓடும் காரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் . ஆக்ரா மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி, கடந்த வியாழக்கிழமை வீட்டிலிருந்து அருகிலுள்ள கடைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது அங்கு காரில் வந்த 16 மற்றும் 17 வயது மதிக்கத்தக்க இரண்டு சிறுவர்கள்,அப்போது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாட்டிலில் உள்ள தண்ணீரைக் குடிக்கும் படி கொடுத்துள்ளனர். சிறுமி எதுவும் யோசிக்காமல் அதைக் குடித்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை
இதனால் தலை சுற்றி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுவர்கள், சிறுமியை காரில் ஏற்றிக் காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளனர். பிறகு அங்குச் சிறுமியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து மேம்பாலத்தின் அருகே வீசி விட்டு, சிறுவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தண்ணீரில் போதை மருந்து கலக்கிக் கொடுத்தது தெரியவந்தது. மேலும் தலைமறைவாக உள்ள சிறுவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் உத்தரப்பிரதேசம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உளவியல் ஆலோசனை செய்வதற்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.