வன்முறையில் ஈடுபடுவர்களுக்கு ராணுவத்தில் இடமில்லை : முப்படை அதிகாரிகள் எச்சரிக்கை
அக்னிபத் திட்டம் வாபஸ் பெறப்படாது எனவும், வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு ராணுவத்தில் இடமில்லை எனவும் பாதுகாப்பு துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. பீகார், உ.பி தெலங்கானாவில் 4 ரயில்கள் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில், 2 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.
இளைஞர்கள் ராணுவத்தில் சேர வாய்ப்பு
தெலங்கானாவில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக முப்படைகளின் தலைமை தளபதிகளுடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டாவது நாளாக ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக முப்படையை சேர்ந்த உயர் அதிகாரிகள் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ராணுவ விவகார துறை கூடுதல் செயல் லெப் ஜெனரல் அனில் புரி, அக்னிபத் திட்டம் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த சீர்திருத்தம் எனக் கூறினர்
மேலும் , இந்த ட்அக்னிபத் திட்டம் மூலம் அதிகளவு இளைஞர்கள் ராணுவத்தில் சேர வாய்ப்பு உள்ளதாகவும், அக்னிபத் திட்டம் 1989 முதல் கிடப்பில் உள்ளதாகவும் கூறினார்.
சேதப்படுத்துபவர்கள் ராணுவத்தில் சேர இயலாது
ராணுவத்தில் சேர ஒழுக்கம் மிக அவசியம் எனவும் தீவைப்பு, கல்வீச்சு போன்ற சம்பவங்களில் ஈடுபடுவர்களுக்கு ராணுவத்தில் இடமில்லை எனக் கூறினார். மேலும் வன்முறையில் ஈடுபட்டு பொது சொத்துகளை சேதப்படுத்துபவர்கள் ராணுவத்தில் சேர இயலாது எனவும் கூறினார்.

ராணுவத்தில் சேர விரும்பும் ஒவ்வொரு விண்ணப்பதாரரின் பின்னணியும் போலீஸ் மூலம் சரிபார்க்கப்படும் எனவும் வழக்கு ஏதும் பதிவு செய்யப்பட்டிருந்தால் அவர்களுக்கு ராணுவத்தில் சேர முடியாது எனவும் கூறினார்.
அடுத்ததாக பேசிய இந்திய விமானப்படையின் ஏர் மார்ஷல் எஸ்கே ஜா, முதலாவது பேட்ஜ் அக்னிவீரர்கள் தேர்வு ஜூன் 24 முதல் ஜூலை 24 வரை நடக்க உள்ளது எனவும், முதல்கட்டமாக ஆன்லைன் தேர்வு துவங்கி, முதல் பேட்ஜ் வீரர்கள் டிசம்பரில் பணியில் சேர்வார்கள் என்றார்.
ட்ரம்பின் மிரட்டலுக்கு பதிலடி...! அமெரிக்காவிற்கு ஈரான் விடுத்துள்ள நேரடிப் போர் எச்சரிக்கை IBC Tamil
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan