வாட்டி வதைத்த அக்னி நட்சத்திரம் இன்றுடன் விடைபெறுகிறது..!

TN Weather Regional Meteorological Centre Weather
By Thahir May 29, 2023 06:49 AM GMT
Report

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் காலம் இன்றுடன் விடைபெறும் நிலையில் வெளியிலின் தாக்கம் ஒரு வாரகாலத்துக்கு இயல்பை விட அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அவதியடைந்த மக்கள் 

தமிழ்நாட்டில் கடந்த மே 4 ஆம் தேதி அக்னி நட்சத்திர வெயில் தொடங்கியது. கத்தரி வெயில் காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி வதைத்து வந்தது.

கத்தரி வெயில் தொடங்கியதுமே தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை பெய்தது இது மக்களை கொஞ்சம் மகிழ்ச்சி அடைய வைத்தது.

வங்க கடலில் உருவான மோச்சா புயல் மற்றும் வானிலை மாற்றம் காரணமாக உண்மையான அக்னி நட்சத்திர காலத்தை மக்கள் உணர முடிந்தது.

வாட்டி வதைத்த அக்னி நட்சத்திரம் இன்றுடன் விடைபெறுகிறது..! | Agni Natchathiram Ended Today

கடந்த 2 வார காலமாகவே தமிழ்நாட்டில் வறண்ட வானிலை நிலவத் தொடங்கியது.பல ஊர்வகளில் வெயில் சுட்டெரித்தது பெரும்பாலான ஊர்களில் 40 டிகிரி செல்சியஸை தாண்டி பதிவானது.

வெயிலை தணித்த கோடை மழை 

அக்னி நடத்திரத்தின் பற்பகுதியில் மக்கள் கடும் அவதி அடைந்தனர். பகல் நேரங்களில் கடுமையான வெயில் தாக்கம் இருந்தாலும் மாலை நேரங்களில் விருதுநகர், மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கோடை மழை கொட்டித் தீர்த்தது.

வாட்டி வதைத்த அக்னி நட்சத்திரம் இன்றுடன் விடைபெறுகிறது..! | Agni Natchathiram Ended Today

காலை நேரங்களில் வெப்பம் தணிந்து இதமான சூழ்நிலை நிலவியது.இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்றைய தினம் விருதுநகர் மற்றும் சிவகாசியில் இடி மின்னலுடன் கனமழை கொட்டித்தீர்த்தது.

அக்னி நடசத்திரம் இன்றுடன் முடிவுக்கு வந்தாலும் தமிழ்நாட்டில் சில இடங்களில் இன்னும் ஒரு வார காலத்துக்கு வெயிலின் தாக்கம் இயல்பை விட சற்று அதிகமாகவே இருக்கும் என்றும், இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் முதல் 104 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக வருகிற 31 மற்றும் 1 ஆம் தேதி தமிழ்நாட்டில் சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.