தமிழ்நாட்டிலும் வெடித்த அக்னிபாத் போராட்டம்

By Irumporai Jun 17, 2022 09:53 AM GMT
Report

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி ரயில்வே நிலையத்தில் 30க்கும் அதிகமான பட்டதாரி இளைஞர்கள் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பூதாகரமான அக்னி பத்

ராணுவத்தில் இளைஞர்களை அதிகம் சேர்ப்பதற்கான முயற்சியாக அக்னிபாத் எனும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தினை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

தமிழ்நாட்டிலும் வெடித்த அக்னிபாத் போராட்டம் | Agneepath Project Struggle Erupted In Tamil Nadu

இந்தத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. ஆனால், அக்னிபத்திட்டம் இளைஞர்களின் வாழ்வாதரத்தை பாதிக்கும் வகையில் உள்ளதாக பிகார், மத்தியப் பிரதேசம், ஹரியானா உள்பட நாட்டின் பல பகுதிகளில் இந்த திட்டத்திற்கு எதிராக ஏராளமான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தமிழகத்திலும் வெடிக்கும் அக்னிபத் 

இந்த திட்டத்தின் கீழ் பணிக்குச் சேர வயது உச்சவரம்பு 21 என்பதால் பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டிலும் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி ரயில்வே ஜங்சன் வளாகத்தில் ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து 30க்கும் அதிகமான பட்டதாரி இளைஞர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு கொண்டு வந்த இந்த திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என கோரிக்கை வைத்த இளைஞர்கள் நடைமேடை அருகே தண்டவாளத்தில் அமர்ந்தபடி முழக்கமிட்டனர்.

தமிழ்நாட்டிலும் வெடித்த அக்னிபாத் போராட்டம் | Agneepath Project Struggle Erupted In Tamil Nadu

அப்போது அங்கு வந்த ரயில்வே காவல்துறையினர் போராட்டம் நடத்திய இளைஞர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் போராட்டத்தை கைவிடாத காரணத்தால் அதிரடியாக கைது செய்தனர்.

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராட்டம் வலுத்து வரும் நிலையில் தமிழகத்தின் திருச்சி பகுதியிலும் போராட்டம் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வெடிக்கும் அக்னிபத் போராட்டம் : ஹரியானாவில் 144 தடை உத்தரவு அமல்