அக்னி பாத் திட்டம் - சேர விருப்புவோம் இந்த இணையத்தில் விண்ணப்பிக்கலாம் - வெளியான அறிவிப்பு

By Nandhini Jun 21, 2022 05:42 AM GMT
Report

ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றில் 4 ஆண்டுகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்யும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

அக்னி பாத் திட்டம்

இந்திய ராணுவத்தில் இளைஞர்களை சேர்க்க மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னி பாத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 6 மாத பயிற்சிக்குப் பின்னர் 4 ஆண்டுகள் மட்டுமே இவர்கள் ராணுவத்தில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் பணிக்காலம் முடிந்து தேர்வு செய்யப்படும் கடும் எதிர்ப்பு 25 சதவீதம் பேர் மட்டுமே நிரந்தர பணிக்கு சேர்த்துக் கொள்ளப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இளைஞர்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் வன்முறை வெடித்துள்ளது.

736 ரயில்கள் ரத்து

அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டம் வட மாநிலங்களில் தீவிரமாகக் காணப்படுகிறது. இந்நிலையில் நாடு தழுவிய முழு அடைப்பு காரணமாக இன்று 736 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பீகார், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், ஹரியானா, டெல்லி, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.

பள்ளிகளுக்கு விடுமுறை

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அம்மாநிலதில் இன்று நடைபெறவிருந்த 9 மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லி - உத்தரப்பிரதேச எல்லையில் உள்ள டெல்லி - குருகிராம் எக்ஸ்பிரெஸ்வே பாரத் பந்த் போராட்டம் காரணமாக கடும் நெரிசலை சந்தித்தது. மேலும், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் இன்று டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தவுள்ளன.

அக்னி பாத் திட்டம் - சேர விருப்புவோம் இந்த இணையத்தில் விண்ணப்பிக்கலாம் - வெளியான அறிவிப்பு | Agneepath Aarmy Apply

விண்ணப்பிக்கலாம்

இந்நிலையில், அக்னி பாத் திட்டத்தில் இந்திய விமானப் படையில் சேருவதற்கு வரும் 24ம் தேதி முதல் ஜூலை 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, careerindianairforce.cdac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.