உடல் முலுவதும் மனித சாம்பல்..மண்டை ஓடுகள் - நள்ளிரவில் மிரளவைத்த அகோரிகள் பூஜை!
நள்ளிரவில் அகோரிகள் பூஜை நடத்திய சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அகோரிகள்
நவராத்திரி விழா இந்தாண்டு அக்டோபர் 03ம் தேதி துவங்கி, அக்டோபர் 11ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. இந்த விழா 9 நாட்களுக்கு நடைபெறும்.பிறகு சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையுடன் இந்த விழா முடிவுக்கு வரும்.
நவராத்திரியையொட்டி பெரும்பாலானோர் தங்கள் வீடுகள், அலுவலகங்களில் கொலு வைத்திருப்பார்கள்.அது போல் கோயில்களிலும் கொலு வைப்பதுண்டு. ஆனால் நவராத்திரி விழாவை முன்னிட்டு அகோரிகள் நள்ளிரவில் பூஜை நடத்திய சம்பவம் திகில் அடையச் செய்துள்ளது.
திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தில் ஜெய் அகோர காளி கோயில் உள்ளது.இந்த கோயிலில் காசியில் அகோரி பயிற்சி பெற்ற அகோரி மணிகண்டன் பூஜைகளைச் செய்து கோயிலையும் நிர்வகித்து வருகிறார்.
பூஜை
குறிப்பாகச் சனிக்கிழமை, அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி மற்றும் விசேஷ காலங்களில் சிறப்புப் பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வழக்கம்.அந்த வகையில் இந்த ஆண்டு நவராத்திரியின் முதல் நாளான நேற்று நள்ளிரவு மயானத்தில் அகோரி மணிகண்டன்
காளி சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில் எழுந்தருளி உடல் முழுவதும் திருநீறு பூசிக் கொண்டும், மண்டை ஓடுகளை வைத்துச் சிறப்பு யாகங்கள் செய்தும் சிறப்புப் பூஜைகளை நடத்தினர். இதனால் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.