சடலத்தின் மீது ஏறி உட்கார்ந்த அகோரி; முதியவரின் ஆசையை நிறைவேற்ற அரங்கேறிய விநோத பூஜை!

Death
By Sumathi Oct 11, 2023 05:00 AM GMT
Report

அகோரிகள் முறைப்படி சடலம் ஒன்று எரியூட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அகோரி பூஜை

திருச்சி, பூவாளுரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (60). இவர் மராடைப்பு காரணமாக உயிரிழந்தார். அதனையடுத்து இறுதிசடங்கில் சுடுகாட்டிற்கு ஏரியூட்டுவதற்காக அவரது உடலை கொண்டு வந்தனர்.

சடலத்தின் மீது ஏறி உட்கார்ந்த அகோரி; முதியவரின் ஆசையை நிறைவேற்ற அரங்கேறிய விநோத பூஜை! | Aghori Puja In Cemetery In Trichy

மேலும், அவரது உடலுக்கு அகோரி முறைப்படி, ஆன்மா சாந்தி பூஜை செய்து தகனம் செய்ய வேண்டும் என உறவினர்கள் விருப்பம் தெரிவித்தனர். அதனையடுத்து, அரியமங்கலத்தில் உள்ள அகோரி மணிகண்டன் என்பவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டதையடுத்து அவர் சுடுகாட்டிற்கு வந்துள்ளார்.

நள்ளிரவில் சங்கு சத்தம்…கழுத்தில் மண்டை ஓடுகள் - அகோரிகள் நடத்திய யாக பூஜை

நள்ளிரவில் சங்கு சத்தம்…கழுத்தில் மண்டை ஓடுகள் - அகோரிகள் நடத்திய யாக பூஜை

பரபரப்பு

தொடர்ந்து, தகன மேடையில் வைக்கப்பட்டிருந்த பாலசுப்பிரமணியனின் சடலத்தின் மீது மணிகண்டன் ஏறி அமர்ந்து கொண்டார். டம்ரா மேளம் அடித்தும், சங்கு ஒலி எழுப்பியும், ஹர ஹர மகாதேவா என்றும் சுடுகாட்டில் முழக்கமிட்டனர்.

சடலத்தின் மீது ஏறி உட்கார்ந்த அகோரி; முதியவரின் ஆசையை நிறைவேற்ற அரங்கேறிய விநோத பூஜை! | Aghori Puja In Cemetery In Trichy

அதன்பின், பூஜை நிறைவு செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. சுடுகாட்டில் இருந்து திடீரென வந்த இதுபோன்ற சத்தம் காரணமாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.