உறவுக்கு சம்மதம் தெரிவிக்கும் வயதை மறுபரிசீலனை செய்யவேண்டும் - தலைமை நீதிபதி

Delhi India Supreme Court of India Relationship
By Sumathi Dec 11, 2022 06:39 AM GMT
Report

பாலுறவுக்கு சம்மதம் தெரிவிக்கும் வயதை மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

பாலுறவு

டெல்லி கோர்ட்டில் நடந்த விசாரணையில், முழு சம்மதத்துடன் உடல் உறவில் ஈடுபடும் முன் துணையின் வயதை சரிபார்க்க வேண்டிய அவசியமில்லை என்று நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்தது. அது பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் கிளப்பியது.

உறவுக்கு சம்மதம் தெரிவிக்கும் வயதை மறுபரிசீலனை செய்யவேண்டும் - தலைமை நீதிபதி | Age Of Consent For Sex Should Be Reconsidered

இந்நிலையில், யுனிசெப் அமைப்புடன் இணைந்து உச்ச நீதிமன்றத்தின் சிறார் நீதி குழு நடத்திய இரண்டு நாள் ஆலோசனையில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கலந்துகொண்டு உரையாற்றினார். அதில், 18 வயதுக்குட்பட்டவர்கள் முழு சம்மதத்துடன் பாலுறவில் ஈடுபட்டாலும் போக்சோ சட்டம் அதை குற்றமாக கருதுகிறது.

நீதிபதி வேண்டுகோள்

இளம் பருவ காதலர்களின் பாலியல் செயல்பாடுகளை கையாள்வதில் நீதிமன்றங்கள் சவாலை எதிர்கொள்கின்றன. நான் நீதிபதியாக இருந்த காலத்தில், போக்சோ வழக்குகளை கையாண்ட நீதிபதிகள் பலருக்கு கடினமான கேள்விகள் எழுந்ததை கவனித்துள்ளேன்.

ஆகையால், போக்சோ சட்டத்தின் கீழ் உள்ள வயது வரைமுறையை நாடாளுமன்றம் பரிசீலிக்க வேண்டும். குற்றவாளி ஒரு குடும்ப உறுப்பினராக இருந்தாலும், வெளிப்படையாக புகாரளிக்க முன் வரவேண்டும் அதை அரசு ஊக்குவிக்க வேண்டும்.

அதைத் தடுக்க நீதித்துறையுடன் நிர்வாகமும் கைகோர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.