யானைகள் காப்பகமானது நெல்லை அகத்தியமலை : மத்திய அரசு அறிவிப்பு

By Irumporai Aug 12, 2022 07:47 AM GMT
Report

தமிழகத்தின் ஐந்தாவது யானைகள் காப்பகமாக நெல்லை அகத்தியர் மலையை மத்திய அரசுஅறிவித்துள்ளது.   

ஆண்டுதோறும் ஆகஸ்டு 12ம் தேதி உலக யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் வனப்பகுதிகள் தோன்று செழுமை அடைவதற்கும், பல்வேறு இயற்கை காரணிகளுக்கும் முக்கிய காரணமாக யானைகள் உள்ளன.

யானைகள் 

1992 ஆம் ஆண்டு இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தால் ‘ப்ராஜெக்ட் எலிஃபண்ட்’ தொடங்கப்பட்டது.

யானைகள் காப்பகமானது நெல்லை அகத்தியமலை : மத்திய அரசு அறிவிப்பு | Agathiyamala Announced As 5Th Elephant Sanctuary

இது மாநிலங்கள் தோறும் உள்ள ஆசிய யானைகளின் எண்ணிக்கையை பாதுகாக்கவும், வனவிலங்கு மேலாண்மை முயற்சிகளுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டு ப;ல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது .

அகஸ்தியர் மலை

இந்த நிலையில் தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தில் உள்ள அகஸ்தியர் மலையினை யானைகள் காப்பகமாக அறிவித்துள்ளது மத்திய அரசு , தமிழகத்தில் ஏற்கனவே 4 யானைகள் காப்பகம் உள்ள நிலையில், 1,197 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள அகத்தியர் மலை தமிழகத்தின் ஐந்தாவது யானைகள் காப்பகமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.