இப்படியே விளையாண்டா போக வேண்டியது தான் - இந்திய வீரரை எச்சரிக்கும் முன்னாள் வீரர்
இந்திய அணி வீரரான சூர்யகுமார் யாதவ் விரைவில் பழைய பார்மிற்கு திரும்ப வேண்டும் என முன்னாள் இந்திய வீரர் அஜித் அகார்கர் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடர் அக்டோபர் 17 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நவம்பர் 14 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் திட்டம் தீட்டி வருகின்றன.
அதேபோல் முன்னாள் வீரர்கள் பலரும் டி.20 உலகக்கோப்பை குறித்தான தங்களது எதிர்பார்ப்புகளையும், தங்களது கணிப்புகளையும் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் முன்னாள் இந்திய வீரர் அஜித் அகார்கர் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சொதப்பி வரும் சூர்யகுமார் யாதவ் விரைவில் தனது பார்மிற்கு திரும்ப வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் களத்தில் சிறிது நேரமாவது தாக்குப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் மனவுறுதி அதிகமாகும். அவரது ஆட்டம் மிகவும் கவலையளிக்கிறது. இன்னும் சில ஐபிஎல் போட்டிகள்தான் இருப்பதை சூர்யகுமார் நினைவில் கொள்ள வேண்டும் என அகார்கர் கூறியுள்ளார்.