14 நாட்களுக்கு பிறகு துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் - தொடரும் துயரம்
துருக்கி மற்றும் சிரியாவில் மீண்டும் நேற்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
47 ஆயிரம் பேரை காவு வாங்கி பூகம்பம்
துருக்கி மற்றும் சிரியா எல்லையில் கடந்த 6ம் தேதி அதிகாலை காசியான்டெப் நகரை மையமாக கொண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கம் ஒட்டுமொத்த துருக்கியையும் உலுக்கியது. இந்த நிலநடுக்கம் 10 மாகாணங்களை நிலநடுக்கம் புரட்டி போட்டது.
இதில் பல அடுக்கு கட்டிடங்கள் சீட்டு கட்டுப்போல் சரிந்து விழுந்தன. கட்டிடங்களில் இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இடிந்து தரைமட்டமாகிய இடிபாடுகளில் சிக்கி சுமார் 47 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
இதில் ஏராளமான குழந்தைகள் தங்கள் தாய், தந்தையை இழந்து நிற்கதியாக நிர்கின்றனர். அதே போன்று இன்னும் பலர் தங்கள் உறவுகளை இழந்து தவிக்கின்றனர்.
இந்த நிலையில் நிலநடுக்கத்துக்கு பிறகு கிட்டத்தட்ட 2 வாரங்களுக்கு பிறகு தீவிர மீட்பு பணிகள் நடந்து வந்த நிலையில் மீட்பு பணிகள் நேற்று மாலையுடன் நிறைவடைந்துள்ளது.
மீண்டும் பூகம்பம் - தொடரும் சோகம்
இதனிடையே நேற்று இரவு துருக்கி மற்றும் சிரியாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோளில் 6.4 ஆக பதிவாகியுள்ளது.

ஹடாய் மாகாணத்திற்கு அருகிலுள்ள துருக்கி - சிரியா எல்லைப் பகுதியில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய தரைக் கடலர் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் தெற்கு ஹடாய் மாகாணமான அனடோலுவில் ஏற்பட்ட 2 புதிய நிலநடுக்கங்களில் குறைந்தது 3 பேர் கொல்லப்பட்டனர் என்றும் 213 பேர் காயமடைந்துள்ளனர்.
இதையடுத்து அந்த பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக துருக்கி உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
BREAKING NEWS: Another 6.4 magnitude earthquake hits Southern #Turkey? Innalillahi Wa'inna Ilaihirrajiun? This is heartbreaking? pic.twitter.com/Ju4C8h8GeV
— Dambatta (@Dambatta_1) February 20, 2023