மீண்டும் முழு ஊரடங்கு: மத்திய அரசு கடும் எச்சரிக்கை

Covid curfew Central government
By Petchi Avudaiappan Jul 06, 2021 04:21 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்றாவிட்டால், மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் மாநில அரசுகளின் முழு ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளால் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. 

ஊரடங்கு தளர்வுகளால் கூட்டம் அதிகமுள்ள இடங்களில், பொது மக்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருக்கின்றனர். இதனால், கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதே நிலை தொடர்ந்தால் தளர்வுகள் திரும்ப பெறப்பட்டு மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த நேரிடும் என மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.