தமிழக மக்களே உஷார்..! மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா தொற்று - அமைச்சர் எச்சரிக்கை..
தமிழக மக்கள் அடுத்த 2 மாதத்திற்கு கவனமாக இருக்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கெரோனா தொற்றால் பாதிப்போர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இருந்தாலும் மக்கள் கொரோனா வழிக்காட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் குறிப்பாக முககவசம்,சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என மத்திய,மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே கொரோனா பாதிப்பு குறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது.
கொரோனா குறைந்து வருகிறது என மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம். பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்கவும்.
மலேசியா, சிங்கப்பூர், தென் கொரியா, சீனா போன்ற நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
கொரோனா பாதிப்பு குறித்து அடுத்த 2 மாதம் கவனமாக இருக்க வேண்டும் என கான்பூர் ஐஐடி தெரிவித்திருக்கிறது.
தமிழ்நாட்டில் கொரோனா நான்காவது அலை வராது. அப்படியே வந்தாலும் அதனை விரட்ட, மருத்துவ கட்டமைப்பு பலமாக உள்ளது என கூறினார்.