தமிழகத்தில் மாற்றம் தேவையில்லை -நடிகர் அஜித்துக்கு நன்றி சொன்ன ஸ்டாலின்!
தமிழக சட்டசபை தேர்தலில் வாக்களித்த பின் மாற்றம் தவையில்லை என குறிப்பிட்ட நடிகர் அஜித்துக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்திருக்கின்றார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரத்பமான நிலையில், ஜனநாயன கடமையை நிறைவேற்றுவதற்காக அஜித் துபாயில் இருந்து நேற்று அதிகாலை சென்னைக்கு வந்திருந்தார்.
கடந்த சில வருடங்களாக திரைப்படங்களில் பிஸியாக பணியாற்றி வந்த நடிகர் அஜித், அதற்கு இணையாக தற்போது சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் நடைபெறும் கார் பந்தயங்களில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.

மேலும், கார் பந்தயங்களில் கலந்துக் கொள்வதற்காக அவர் தற்போது வெளிநாடுகளில் அதிக நேரம் செலவழித்து வரும் நிலையில், சட்டசபைத் தேர்தல் இன்று நடைபெறும் நிலையில் நேற்றைய தினம் அஜித் சென்னை வந்தார்.
இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு ஆரம்பமாகிய நிலையில், அதற்கு முன்பாகவே வெள்ளை கோட் அணிந்து வாக்களிக்க சென்ற அஜித், முதல் ஆளாக தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.
காலை 6.40 மணிக்கே தனது மனைவி ஷாலினியுடன் வந்த அவர் பொது மக்களுக்கு இடையூறு செய்யக் கூடாது என்பதற்காகவும் ரசிகர்களின் கூட்டத்தை தவிர்க்கவும் அவர் வாக்குப் பதிவு தொடங்குவதற்கு முன்பே காத்திருந்து வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் எஸ்ஐஇடி கல்லூரியில் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்த போது தமிழ்நாடு வெல்லும். தமிழக வளர்ச்சிக்கு தவறாமல் வாக்களியுங்கள், நீங்கள் அளிக்க போவது வாக்கு மட்டும் அல்ல, தமிழகத்தை காக்கும் கேடயம் என குறிப்பிட்டார்.
மேலும் "அஜித்திடம் இந்த தேர்தலில் மாற்றம் வேண்டுமா" என கேட்டதற்கு அவர் மாற்றம் தேவையில்லை என பதில் அளித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் முதல்வரிடம் கேட்டனர். அதற்கு அவர் அஜித் நல்ல கருத்துதானே சொல்லியிருக்கிறார், அவருக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.