புதிய மன்னரானார் மூன்றாம் சார்லஸ் : இங்கிலாந்தில் வரலாற்றில் புதிய திருப்பம்
Queen Elizabeth II
King Charles III
By Irumporai
இங்கிலாந்து மன்னராக 73 வயதான 3ஆம் சார்லஸ் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தான் அதிக வயதில் இங்கிலாந்து மன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
எலிசபெத் மறைவு
இங்கிலாந்தில் நீண்ட காலம் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் நேற்று முன்தினம் காலமானார். இவருக்கு வயது 96. இவரது மறைவுக்கு பல நாட்டு தலைவர்கள் தங்கள் அஞ்சலியை செலுத்தினர்.இங்கிலாந்தில் 10 நாட்கள் துக்க அனுசரிப்பு அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மன்னராக மூன்றாம் சார்லஸ்
இந்நிலையில், இங்கிலாந்து புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு வயது 73 ஆகும். இவர் தான் இங்கிலாந்தின் அதிக வயதில் மன்னராக பதவியேற்றவர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.