தவெக கூட்டணியா? திமுக கூட்டணியா? சூசகமாக பதிலளித்த ஓபிஎஸ்
முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசிய பின்னர் கூட்டணி குறித்த கேள்விக்கு ஓபிஎஸ் பதிலளித்துள்ளார்.
முதல்வரை சந்தித்த ஓபிஎஸ்
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சென்னையில் உள்ள தனியார் விடுதியில் இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு சந்தித்து பேசியது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று காலையில், முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி செல்லும் முன்னர் ஓபிஎஸ் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
30 நிமிடங்களுக்கு அதிகமாக இந்த சந்திப்பு நடைபெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அரசியலில் நிரந்தர எதிரி இல்லை
திமுகவுடன் கூட்டணி வைக்கப்படுமா என்ற கேள்விக்கு, "அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை. நிரந்தர எதிரிகளும் இல்லை என்பதுதான் கடந்தகால வரலாறு. எதிர்காலத்தில் தேர்தல் நெருங்கும்போது எதுவும் நடக்கலாம் என கூறினார்.
மேலும்,, உடல் நலம் பற்றி விசாரிக்கவே இந்த சந்திப்பு நடைபெற்றது. அரசியல் நிமித்தமாக எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. அரசியலில் எனக்கு ஒரு சுயமரியாதை உள்ளது. ஜெயலலலிதா அவர்களின் நேரடி பார்வையில், 30 ஆண்டுகள் பணியாற்றியவன் நான் என தெரிவித்தார்
தவெக உடன் கூட்டணியா என்ற கேள்விக்கு, ‘விஜயுடன் நானும் பேசவில்லை அவரும் பேசவில்லை" என கூறினார்.