முடிவுக்கு வந்த போர் - ஐபிஎல் போட்டிகள் தொடங்குவது எப்போது?
இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்துள்ள நிலையில், ஐபிஎல் போட்டிகள் மீண்டும் எப்போது தொடங்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம்
பஹல்காம் தாக்குதலுக்கு, பதிலடி கொடுக்கும் வகையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கியழித்துள்ளது.
இதனையடுத்து, ஆபரேஷன் பன்யான் மர்சூஸ் (Operation Bunyun Al Marsoos) என்ற பெயரில், இந்தியா பகுதிகளில் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.
நிறுத்தப்பட ஐபிஎல்
பஞ்சாப் தர்மசாலா மைதானத்தில், பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்று கொண்டிருந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவம் பஞ்சாப் எல்லை பகுதிகளில் தாக்குதல் நடத்தியதை, போட்டி இடையிலேயே நிறுத்தப்பட்டு, ரசிகர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
இதனையடுத்து, போர் பதற்றம் அதிகரித்த நிலையில், ஐபிஎல் போட்டிகளை, ஒரு வாரத்திற்கு ரத்து செய்வதாக பிசிசிஐ அறிவித்தது.
தாக்குதல் இல்லாத பெங்களூரு, ஹைதராபாத், சென்னை ஆகிய 3 நகரங்களில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இன்று மாலை 5 மணியளவில் இரு நாடுகளும் போர் நிறுத்தம் செய்வதாக அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டன.
மீண்டும் தொடங்குவது எப்போது?
இதனால், ஐபிஎல் போட்டிகள் மீண்டும் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ஏற்கனவே போர் பதற்ற சூழலில், பாதுகாப்பு காரணங்களுக்காக வெளிநாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் சிலர் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர்.
வரும் 12 ஆம் தேதி இரு நட்டு ராணுவ இயக்குனர்களும் பேச்சு வார்த்தை நடத்த உள்ள நிலையில், அதன் பிறகு பிசிசிஐ எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மே 25 ஆம் தேதி முடிவடைவதாக இருந்த ஐபிஎல் தொடர், ஜூன் வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிநாட்டு வீரர்களின் இருப்பு, இந்திய அணிக்கான அடுத்த கிரிக்கெட் தொடர்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அட்டவணை தயாரிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.