நாளைக்கு உலகம் அழியப்போகுது - கானா தீர்க்கதரிசி அதிர்ச்சி கணிப்பு
நாளை கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடும் நிலையில் நாளை ராட்சச வெள்ளத்தின் மூலம் கடவுள் உலகத்தை முடிவுக்கு கொண்டு வரப் போகிறார் என
எபோ நோவா
தன்னைத்தானே தீர்க்கதரிசி என சொல்லிக் கொள்ளும் கானா நாட்டை சேர்ந்த எபோ நோவா என்பவர் கூறியிருக்கிறார்.

அழிவுக்குப் பின் பூமியில் மீண்டும் மக்களை குடியமர்த்த பைபிளில் வருவது போல 8 நோவா பேழைகளை கட்ட கடவுள் தன்னை பணியமர்த்தியிருப்பதாகவும் அவர் கூறியதால் அவரை பின்தொடர்பவர்கள் தங்களை சொத்துக்களை விற்று அவருக்கு பணங்களை கொடுத்து வருகின்றனர்.
உலகம் அழியும்
இந்த வருடம் சுனாமி வரும், மழை வெள்ளத்தில் மக்கள் இறந்து போவார்கள், அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படும், ஒரு முக்கிய அரசியல் தலைவர் இறந்து போவார் என்றெல்லாம் சில தீர்க்கதரிசிகள் கணித்தனர்.
ஆச்சரியப்படும் வகையில் அவற்றில் ஒரு சில விஷயங்கள் நிஜத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது.