மனைவி ஐஸ்வர்யாவை தொடர்ந்து மகன்களையும் ஒதுக்கினாரா நடிகர் தனுஷ்? - புகைப்படத்தால் ரசிகர்கள் குழப்பம்
நடிகர் தனுஷ் தன்னுடைய புது வீட்டு கிரஹபிரவேச நிகழ்ச்சியில் தன் மகன்கள் இன்றி எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
திருமணம் - பிரிவு
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தனுஷ். தன்னை விட சின்ன வயதான நடிகர் தனுஷை காதலித்து கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இருமகன்கள் உள்ளனர். மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இருவரும் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தனர். இவர்களின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியிலும், குடும்பத்தினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிரிவுக்கு பின் இருவரும் தங்களுடைய திரைப்பட வேலைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். லால் சலாம் படத்த்தை ஐஸ்வர்யா இயக்கி வருகிறார்.
புது வீடு கிரஹபிரவேசத்தில் மகன்களை புறக்கணித்த தனுஷ்
இந்த நிலையில் சென்னை போயஸ் கார்டனில் நடிகர் தனுஷ் தனது பெற்றோருக்கு பரிசளிக்க ரூ.150 கோடியில் வீடு ஒன்றை கட்டினார்.
அந்த வீட்டின் கிரஹபிரவேசம் அண்மையில் நடந்துள்ளது. அப்போது தனுஷ் ரஜினி வீட்டில் இருந்து யாரையும் அழைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா கலந்து கொள்ளவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு போயஸ் கார்டன் வீட்டில் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சந்தித்து கொண்டதாக செய்திகள் வெளியாகின.
இதனிடையே நடிகர் தனுஷ் தான் ஆசையாக கட்டிய வீட்டு கிரஹபிரவேசத்துக்கு தனது முன்னாள் மனைவியை அழைக்காதது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் நடிகர் தனுஷ் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் தன் மகன்களுடன் சென்று வந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகாததால் மகன்களையும் நடிகர் தனுஷ் ஒதுக்கிவிட்டாரா என ரசிகர்கள் கிசு கிசுகின்றனர்.