178 வருஷத்திற்குப் பின்.. அபூர்வ சூரிய கிரகணம் - யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்? மிஸ் பண்ணிராதீங்க!
இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் மிகவும் அரிதான நிகழ்வாக கருதப்படுகிறது.
சூரிய கிரகணம்
இந்த ஆண்டு நாளை சர்வ மகாளய அமாவாசை அன்று சூரிய கிரகணம் நிகழவுள்ளது. அப்படிப்பட்ட ஒரு கிரகணம் 1845 ஆம் ஆண்டு ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.
178 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது அப்படியொரு தற்செயல் நடந்துள்ளது. இந்த நாளில் ஸ்நானம், தானம் செய்தால் புண்ணிய பலன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்டம்
மிதுன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் பல வகையான மகிழ்ச்சிகள் ஏற்படும். அலுவலகத்தில் உங்கள் பணி பாராட்டப்படலாம். இதன் காரணமாக, உங்களுக்கு சில பெரிய பொறுப்புகளும் வழங்கப்படும். குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து மகிழுங்கள்.
துலாம் ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்குகிறது. சமூகத்தில் மரியாதை பெறுவீர்கள். பணப் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். புதிய வருமான ஆதாரங்களைத் திறப்பதோடு சேமிப்பும் வரும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிச்சியாக இருப்பீர்கள்.சொத்து சம்பந்தமான விஷயங்களிலும் ஆதாயம் கிடைக்கும்.
மகர ராசிக்காரர்களுக்கு புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து வெளியே சென்று மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பணிகள் மீண்டும் தொடங்கலாம். இதன் மூலம் நிதி நெருக்கடியில் இருந்து விடுபடுவீர்கள். முதலீடு நன்மை தரும். வியாபாரத்திலும் முழு லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இந்த கிரக நிகழ்வானது இரவு 8.34 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 2.25 மணி வரை நடக்கிறது.