100 ஆண்டுகளுக்கு பின் கோவிலுக்கு சென்று வழிப்பட்ட பட்டியலின மக்கள்

Tamil nadu
By Thahir Jan 03, 2023 02:18 AM GMT
Report

300க்கும் மேற்பட்ட போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் 100 ஆண்டுகளுக்கு பின் கோயிலுக்குச் சென்று வழிப்பட்டனர்  பட்டியலின மக்கள்.

100 ஆண்டுகளுக்கு பின்னால் கோவிலுக்கு சென்ற பட்டியலின மக்கள் 

கள்ளக்குறிச்சி அருகே எடுத்தவாய்நத்தம் கிராம பட்டியலின மக்கள் 100 ஆண்டுகளுக்கு பின் கோயிலுக்குச் சென்றனர். அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க டிஐஜி தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

After 100 years the people of the list visited the temple

கள்ளக்குறிச்சி அருகே எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் 1000க்கும் மேற்பட்ட குடுத்துங்கள் வசித்து வருகின்றனர் இதில் 600க்கும் மேற் பட்ட குடும்பத்தினர் ஆதிதிராவிட பகுதியை சேர்த்தவர்கள் .இவர்களுக்கு கடத்த 100 ஆண்டுகளாக வரதராஜ பெருமாள் கோயிலில் சென்று வழிபட அனுமதிக்கப்படாமல் இருந்தது .

போலீசார் பலத்த பாதுகாப்பு 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியார் மாற்று அரசுக்கு மக்களை கோரிக்கை விடுததை அடுத்து வைகுண்ட ஏகாதசியான இன்று ஆதிதிராவிடர் பகுதியில் உள்ள மக்களை ஒன்றிணைத்து விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசாரின் பாதுகாப்புடன் .

ஆதிதிராவிட மக்களை உள்ள வரதராஜ பெருமாள் கோயிலுக்கு அழைத்துச் சென்று சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தனர்.

சுவாமி தரிசனத்திற்கு பிறகு மக்களை பாதுகாப்பாக அவர்களது பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.பல தலைமுறைகளாக இருந்த தடையை நிக்கி தங்களை கோவிலுக்கு அலைத்து சென்று சாமி தரிசனம் செய்வதற்கு உறுதுணையாக இருந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறைக்கு அம்மக்கள் நன்றியை தெரிவித்துள்ளார்.