ஆண் குழந்தை வேணும்; 10 மகள்கள் - 11வது பிரசவத்தில் ஆபத்து

Pregnancy Haryana
By Sumathi Jan 07, 2026 12:45 PM GMT
Report

10 பெண் குழந்தைகளைக் கொண்ட தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ஆண் குழந்தை

ஹரியானா, உசானா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் 37 வயது பெண்மணி ஒருவர் தனது 11-வது குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

ஆண் குழந்தை வேணும்; 10 மகள்கள் - 11வது பிரசவத்தில் ஆபத்து | After 10 Daughters Woman Birth Son Haryana

ஏற்கனவே 10 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து மருத்துவர் நர்வீர் ஷியோரன் கூறுகையில், "இது மிகவும் ஆபத்தான பிரசவம். தாய்க்கு ரத்த சோகை இருந்ததால் மூன்று யூனிட் ரத்தம் செலுத்தப்பட்டது. தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர்" என தெரிவித்துள்ளார்.

குழந்தையின் தந்தை சஞ்சய் குமார் (38), ஒரு கூலித் தொழிலாளி. 2007-ல் திருமணமான இவருக்கு 10 பெண் மகள்கள் உள்ளனர்.

10 மகள்கள் 

இது குறித்து அவர் கூறுகையில், "எங்களுக்கு ஒரு மகன் வேண்டும் என்பது நீண்ட கால ஆசை. எனது மூத்த மகள்களும் தங்களுக்கு ஒரு தம்பி வேண்டும் என விரும்பினார்கள். கடவுளின் விருப்பப்படி இப்போது மகன் பிறந்துள்ளான்.

இந்தியாவின் முதல் AI கிளினிக்; ஹை-டெக் சிகிச்சை - எங்கு தெரியுமா?

இந்தியாவின் முதல் AI கிளினிக்; ஹை-டெக் சிகிச்சை - எங்கு தெரியுமா?

எனது வருமானம் குறைவு என்றாலும், அனைத்து மகள்களையும் படிக்க வைத்து வருகிறேன். மூத்த மகள் இப்போது 12-ஆம் வகுப்பு படிக்கிறாள்." என்றார்.

மேலும், சமூக வலைதளங்களில் பரவிய ஒரு வீடியோவில், தந்தை சஞ்சய் குமார் தனது 10 மகள்களின் பெயர்களைச் சொல்ல முடியாமல் திணறியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.