பிக்பாஸ் வீட்டில் பெண் போட்டியாளரை சரமாரியாக தாக்கிய சக போட்டியாளர் - ரசிகர்கள் அதிர்ச்சி

biggboss15 Afsana Khan shamitashetty
By Petchi Avudaiappan Oct 17, 2021 11:37 PM GMT
Report

இந்தி பிக்பாஸ் 15 வீட்டில் பாடகி ஆகாசா சிங்கை பாடகி அஃப்சானா கான் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் இந்தி நிகழ்ச்சியின் 15வது சீசனில் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் நாளும் பொழுதும் நகர்கிறது. கடந்த வாரம் போட்டியாளர்களில் ஒருவரான ப்ரதிக் செஹஜ்பல் கோபப்பட்டு ஜன்னல் கண்ணாடியை உடைத்ததுடன் வீட்டில் இருந்த பொருட்களை சேதப்படுத்தினார்.

இந்நிலையில் டாஸ்கின்போது பாடகி அஃப்சானா கான் சக போட்டியாளரான பாடகி ஆகாசா சிங்கை தாக்கியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதோடு நிற்காமல் ஆகாசாவை எட்டி உதைத்ததுடன் அவரின் சட்டை பட்டனை கழற்றி அசிங்கப்படுத்தியிருக்கிறார்.

கேமரா முன்பு என் சட்டை பட்டனை கழற்றி உள்ளாடை எல்லாம் தெரிந்துவிட்டது என்று ஆகாசா வருத்தப்பட, அதற்கு அஃப்சானாவோ,இதற்கு முன்பும் கூட உன் உள்ளாடை வெளியே தெரிந்திருக்கிறது என்றார். அவரின் செயலை பார்த்து பிக் பாஸ் பார்வையாளர்கள் முகம் சுளித்துள்ளனர்.