ஒரே அணியில் இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் - 17 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள போட்டி
மீண்டும் ஆசியா - ஆப்பிரிக்கா கிரிக்கெட் போட்டிகளை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆசியா - ஆப்பிரிக்கா கிரிக்கெட்
17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆசியா - ஆப்பிரிக்கா கிரிக்கெட் தொடரை நடத்த முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
முதல் முறையாக 2005 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் ஆசியா - ஆப்பிரிக்கா கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அதன் பிறகு 2007ஆம் ஆண்டு இந்தியாவில் ஆப்பிரிக்கா - ஆசிய கோப்பை போட்டி நடைபெற்றது.
இந்திய பாகிஸ்தான்
இந்நிலையில் ஆப்பிரிக்க கிரிக்கெட் அமைப்பின் தலைவரான டாவெங்வா முக்லானி, ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் பலவும் ஆப்பிரிக்க - ஆசிய கோப்பையை மீண்டும் கொண்டு வருவதில் ஆர்வமாக உள்ளனர். இது குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அதிகாரிகளுடன் பேசி இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் நடந்த இரண்டு போட்டிகளிலும் ஆசிய அணியில் இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஒன்றாக இணைத்து விளையாடினர். ஆசிய அணியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேச அணி வீரர்கள் பங்கு பெற்றனர். ஆப்பிரிக்கா அணியில் தென் ஆப்பிரிக்கா, கென்யா, ஜிம்பாப்வே வீரர்கள் பங்கு பெற்றனர்.
ஆசிய அணி
2005 ஆப்பிரிக்க - ஆசிய கோப்பைக்கான ஆசிய அணியில் பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தலைமையில் குமார் சங்ககாரா, வீரேந்தர் சேவாக், ஜாகீர் கான் அனில் கும்ப்ளே, சோயப் அக்தர். ஷாஹித் அப்ரிடி ஆகியோர் விளையாடினர்.
2007 ஆம் ஆண்டு நடந்த ஆப்பிரிக்க - ஆசிய கோப்பை ஆசிய அணியில் மகிளா ஜெயவர்த்தனே தலைமையில் தோனி, வீரேந்தர் சேவாக், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், சனத் ஜெயசூர்யா ஆகியோர் விளையாடினர். இதில் 3 ஒரு நாள் போட்டிகளிலும் ஒரு T20 போட்டியிலும் ஆசிய அணியே வெற்றி பெற்றது.