பெண்கள் மொட்டையடித்தால் தான் திருமணம் - அதிர்ச்சி சடங்கு!

Marriage Africa Kenya
By Sumathi Jan 26, 2023 08:11 AM GMT
Report

பெண்கள் திருமணத்துக்கு முன் தலையை மொட்டை அடிப்பதை சடங்காக செய்து வருகிறார்கள்.

திருமண சடங்கு

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் மட்டுமல்லாது உலகில் உள்ள அனைத்து மதங்கள், பல்வேறு பழங்குடியினர்கள். திருமணத்தில் பல்வேறு சடங்குகளும், அதன்மீது அவரவர்களுக்கு பல நம்பிக்கைகளும் இருக்கும். அந்த வகையில், ஆப்பிரிக்க பழங்குடியினரால் பின்பற்றப்படும் திருமண சடங்கு ஒன்று பலரை ஆச்சர்யப்படுத்தி இயிருக்கிறது.

பெண்கள் மொட்டையடித்தால் தான் திருமணம் - அதிர்ச்சி சடங்கு! | African Woman Tribe Shave Heads Before Marriage

அது என்னவென்றால், இந்த ஆப்பிரிக்க பழங்குடியின பெண்கள் திருமணத்துக்கு மொட்டையடிக்க வேண்டு. ஏனென்றால் இது அவர்களின் பாரம்பர்யம். இத்தகைய திருமண சடங்கு, கென்யாவின் போரானா பழங்குடியினரால் பின்பற்றப்படுகிறது.

வினோதம்

மணப்பெண் திருமணத்தின் போது மொட்டை அடித்து கொள்வதால், மணமகனுக்கு மிக அடர்த்தியான நீண்ட முடி இருக்கும் என்கிறார்கள். அதேசமயம் ஆண்கள், தங்களுக்கு அடர்த்தியான முடி வளர, நெய் அல்லது வெண்ணெய் தடவி தங்களை அழகுபடுத்தி கொள்வதில் ஆர்வமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், எத்தியோப்பியா, சோமாலியாவில் உள்ள பழங்குடியின பெண்கள் புகைப்படம் எடுத்து கொள்வதற்கு அனுமதியில்லை. ஏன்னென்றால், புகைப்படம் எடுத்து கொள்ளும் பெண்கள் ரத்த குறைபாட்டால் பாதிக்கப்படுகிறார்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

இந்தியாவிலேயே பல்வேறு சடங்கு சம்பிரதாயங்கள் இருக்கையில், ஆப்பிரிக்க பழங்குடியினரின் இத்தகைய சடங்குகள் பலரை ஆச்சிரியத்துடன் சிந்திக்க வைக்கிறது.