13 வயதிலேயே கர்ப்பம்; 40 வயதில் 44 குழந்தைகள் - கணவர் இல்லாத பெண்ணின் பின்னணி
பெண் ஒருவர் 40 வயதில் 44 குழந்தைகளைப் பெற்றெடுத்த சம்பவம் வியக்க வைத்துள்ளது.
உகாண்டா தாய்
கிழக்கு ஆபிரிக்காவின் உகாண்டாவைச் சேர்ந்தவர் மரியம் நபடான்சி. இளம் வயதிலேயே திருமணமாகியுள்ளது. 13 வயதிலேயே முதலில் இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இப்போது அந்த பெண்ணுக்கு 40 வயதாகும் நிலையில், 44 குழந்தைகள் பிறந்துள்ளது.

அப்பகுதியில் உள்ளவர்கள் இவரை உகாண்டா தாய் என அழைக்கின்றனர். இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், "அவருக்கு இருப்பது ஹைப்பர்-ஓவுலேட் என்ற நிலை. பொதுவாக ஒரு சுழற்சியில் ஒறு முட்டை மட்டுமே வரும்.
44 குழந்தைகள்
ஆனால், இதில் ஒரு சுழற்சியில் பல முட்டைகள் வெளியே வரும். இது கருவுறும் வாய்ப்புகளைக் கணிசமாக அதிகரிக்கிறது. இந்த நிலைமையை மாற்ற வேண்டும் என்றால் அந்த பெண் தொடர்ச்சியாகக் குழந்தைகளைப் பெற்றெடுத்துக் கொள்வதே ஒரே வழி” என்று தெரிவித்துள்ளனர்.
அவர் இப்படி உடனடியாக கருவுறப் பரம்பரையாக டிஎன்ஏவும் காரணம் என்றும் கூறப்படுகிறது. நான்கு இரட்டையர்கள், ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் என்பது 5 முறை, ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் என்பது 5 முறை பிறந்துள்ளது. ஒரே ஒரு முறை மட்டுமே அவருக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது.
இதில் 6 குழந்தைகள் உயிரிழந்துவிட்டன. தற்போது 20 சிறுவர்களும் 18 சிறுமிகளும் உள்ளனர்.
இதற்கிடையில், கணவர் சொத்துகளை எல்லாம் எடுத்துக் கொண்டு சென்றுவிட்டதால், குழந்தைகளை வளர்க்க முடியாத மோசமான நிலை இருப்பதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
ட்ரம்பின் மிரட்டலுக்கு பதிலடி...! அமெரிக்காவிற்கு ஈரான் விடுத்துள்ள நேரடிப் போர் எச்சரிக்கை IBC Tamil