15 மனைவிகள்; 30 குழந்தைகளுடன் டூர் போன மன்னர்; ஸ்தம்பித்த ஏர்போர்ட் - வீடியோ வைரல்!
மன்னர் ஒருவர் 15 மனைவியர், 30 குழந்தைகளுடன் சுற்றுலா சென்றுள்ளார்.
15 மனைவியுடன் டூர்
ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபி விமான நிலையத்துக்கு ஒரு விமானம் வந்தது. இதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
தென் ஆப்பிரிக்காவில் எஸ்வாட்டினி என்ற சிறிய நாடு ஒன்று உள்ளது. இங்கு 1986 முதல் மூன்றாம் எம்ஸ்வாதி என்ற மன்னர் ஆட்சி செய்து வருகிறார். உலகின் பணக்கார மன்னர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.
இவரின் சொத்து மதிப்பு 1 பில்லியன் டாலர் என்று கூறப்படுகிறது. இவர்தான் எஸ்வாட்டினி நாட்டில் இருந்து தனியார் ஜெட் விமானம் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி விமான நிலையத்திற்கு சென்றிருக்கிறார்.
வீடியோ வைரல்
அப்போது பாரம்பரிய உடையுடன் எம்ஸ்வாதி மன்னர் அவரின் 15 மனைவிகள், 30 குழந்தைகள், 100 வேலையாட்களுடன் விமானத்தில் இருந்து இறங்கி இருக்கிறார். இதனால் அங்குள்ள விமான நிலைய ஊழியர்கள் ஆச்சர்யமடைந்துள்ளனர்.
மூன்றாம் எம்ஸ்வாதி மன்னரின் தந்தை, 70-க்கும் மேற்பட்ட மனைவிகளையும், 210 குழந்தைகளையும், 1000-க்கும் மேற்பட்ட பேரக்குழந்தைகளையும் கொண்டிருந்ததாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.