ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளைப் பெற்றெடுத்த மேற்கு ஆப்பிரிக்கா பெண்
மேற்கு ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பிறந்துள்ளாதாக தகவல்கள் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.
மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர் ஹலிமா சிஸ்ஸின். 25 வயதான இவர் கர்ப்பம் தரித்தார். இவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், இவரது கர்ப்பப் பையில் ஏழு குழந்தைகள் இருப்பதாகக் கணித்தனர். இதனையடுத்து ஹலிமாவுக்கு சிறப்பு கண்காணிப்பும்,கவனிப்பும் தேவை என மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனால் ஹலிமாவை மொராக்கோ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு மருத்துவர்களின் சிறந்த கண்காணிப்பில் இருந்த ஹலிமாவுக்கு 9 குழந்தைகள் பிறந்தன. இது குறித்து மாலியின் சுகாதார அமைச்சர் பாண்டா சிபி தெரிவித்ததாவது,
'மொராக்கோ மற்றும் மாலியில் நடத்தப்பட்ட அல்ட்ராசவுண்ட் பரிசோதனைப் படி, சிஸ்ஸே ஏழு குழந்தைகளைப் பெற்றெடுப்பார் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிஸ்ஸினுக்கு நேற்று சிசேரியன் மூலம், ஐந்து பெண் மற்றும் நான்கு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. ஒன்பது குழந்தைகளும் தாயும் நலமாகவுள்ளனர்' என, தெரிவித்துள்ளார்.