இணையத்தை கலக்கும் ஆப்பிரிக்கா சிறுவர்களின் நடன வீடியோ

Viral Video
By Thahir Aug 04, 2022 07:06 AM GMT
Report

 இணையத்தில் ஆப்பிரிக்கா சிறுவர்கள் 3 பேர் நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.

இணையத்தை கலக்கும் சிறுவர்கள் 

ஆப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த சிறுவர்கள் 3 பேர் ஜெருசலேம் என்ற கே,ஜி மாஸ்டரின் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர். இவர்களது வீடியோ ட்விட்டரில் 4மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

இணையத்தை கலக்கும் ஆப்பிரிக்கா சிறுவர்களின் நடன வீடியோ | Africa Kids Dance Viral

ட்விட்டரில் கபிரியேல் கார்னோ என்பவர் இந்த வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளார், இந்த சிறுவர்கள் மூன்று பேரும் உகாண்டா பகுதியைச் சேர்ந்தவர்கள்.

நடனத்தின் போது புன்னகையுடனும்,பாடலுக்கு தகுந்த முக பாவனைகளுடன் நடனமாடிய காட்சிகள் அனைவரையும் கவர்ந்துள்ளது. இதையடுத்து தற்போது இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.