சம்பளம் கூட கொடுக்காத தாலிபான்கள் - ஆப்கானிஸ்தானில் ஆசிரியர்கள் ஏற்பட்ட பரிதாப நிலை

afghanistan afghanteachers
By Petchi Avudaiappan Oct 23, 2021 06:53 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆசிரியர்களுக்கு 4 மாதங்களாக சம்பளம் வரவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து, ஆட்சி மற்றும் அதிகாரத்தை தாலிபான் அமைப்பினர் கடந்த ஆகஸ்ட் மாதம் கைப்பற்றினர். தாலிபான் மூத்தத் தலைவர் முல்லா அகுந்த் தலைமையில் அங்கு தற்காலிக அரசு அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அந்த அரசு இதுவரை பதவி ஏற்காமல் செயல்பட்டு வருகிறது.

இதனிடையே ஆப்கானிஸ்தானின் மேற்கு மாகாணமான ஹெராட்டில் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் ஒன்று கூடி 4 மாதங்களுக்கு மேலாக சம்பளம் வழங்கப்படாத சம்பளத்தை உடனடியாக வழங்கும்படி தாலிபான்களிடம் முறையிட்டனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆசிரியர் சங்க தலைவர் முகமது சபீர் மஷால் அனைத்து ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.

வீட்டு உபயோக பொருட்களை விற்றுத்தான் தங்கள் செலவுகளை பார்த்து கொள்கிறார்கள். மின் கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. அன்றாடத் தேவைக்கு கூட மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம் என தெரிவித்துள்ளார்.