கால கெடு முடிவு; கண்ணீருடன் வெளியேறும் அகதிகள் - பாகிஸ்தானுக்கு கோரிக்கை!

Pakistan Afghanistan Taliban
By Sumathi Nov 02, 2023 04:34 AM GMT
Report

பாகிஸ்தானுக்கு, தலிபான் அவகாசம் குறித்த கோரிக்கையை வைத்துள்ளனர்.

கால அவகாசம்

பாகிஸ்தானில் தங்கியிருக்கும் ஆப்கானியர்கள் அனைவரும் நவம்பர் 1-ம் தேதிக் குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். இல்லையெனில் கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள் என பாகிஸ்தான் அரசு அறிவித்தது.

taliban demand pakistan

அதற்குப் பின் 1 லட்சத்து 30 ஆயிரம் ஆப்கானியர்கள் வெளியேறியுள்ளதாக டோர்காம் மற்றும் சாமன் எல்லைச்சாவடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் பணத்தில் வர்த்தகம் செய்ய முடியாது என தாலிபான் அரசு அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் பணத்தில் வர்த்தகம் செய்ய முடியாது என தாலிபான் அரசு அறிவித்துள்ளது.

தலிபான் கோரிக்கை

இந்நிலையில், தலிபான் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்நாட்டுப் போர் காலத்தில் லட்சக்கணக்கான ஆப்கானியர்களுக்கு அடைக் கலம் கொடுத்த பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளுக்கு நன்றி.

afghans refugees

பாகிஸ்தானை விட்டு வெளியேற யாரையும் கட்டாயப்படுத்த கூடாது. ஆப்கானியர் களுக்கு கூடுதல் அவகாசம் தரவேண்டும்” எனக் கோரிக்கை வைத்துள்ளது.  

கால கெடு முடிவு; கண்ணீருடன் வெளியேறும் அகதிகள் - பாகிஸ்தானுக்கு கோரிக்கை! | Afghans Want Time To Leave Taliban Demand Pakistan