ஆப்கனில் விளையாட்டுப் பொருளாக மாறிய அமெரிக்க போர் விமானம்

play taliban afghanisthan america war aeroplane
By Anupriyamkumaresan Sep 10, 2021 10:06 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in உலகம்
Report

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படையினர் விட்டுச்சென்ற போர் விமானங்களை தலிபான்கள் விளையாட்டு பொருளாக மாற்றியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய அமெரிக்க படைகள் போர் விமானங்கள் உள்ளிட்ட பல்வேறு ராணுவ தளவாடங்களை அப்படியே விட்டுச்சென்றனர்.

அதனை ஏற்கனவே செயலிழக்கச் செய்ததாகவும் கூறப்படுகிறது. அந்தவகையில் அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் போர் விமானத்தின் இறக்கையில் நீண்ட கயிரை கட்டி தலிபான்கள் உற்சாக மிகுதியில் ஊஞ்சல் ஆடுகின்றனர்.

ஆப்கனில் விளையாட்டுப் பொருளாக மாறிய அமெரிக்க போர் விமானம் | Afghanisthan Taliban Playwith America Waraeroplane

தலிபான்களை ஒடுக்க அமெரிக்கா கொண்டு வந்த போர் விமானம் அவர்களுக்கே விளையாட்டு பொருளாக மாறியுள்ளதாக பலரும் பகிர்ந்து வருகின்றனர்.