ஆப்கானில் இருந்து தப்பி வந்த சிறுமி- பிஞ்சு குழந்தையை கொஞ்சி மகிழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்

afghan issue girl kissed baby enjoyed
By Anupriyamkumaresan Aug 23, 2021 07:08 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in உலகம்
Report

ஆப்கானிஸ்தானில் இருந்து விமானம் மூலம் இந்தியா வந்து சேர்ந்த சிறுமி, தன்னுடன் பயணித்த குழந்தையை பாச மிகுதியில் கொஞ்சி மகிழ்ந்த காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதால் அப்பகுதி முழுவதும் பெரும் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து சி-17 விமானம் மூலம் 107 இந்தியர்கள் உள்பட 168 பேர் டெல்லி அருகேயுள்ள காஸியாபாத்திற்கு வந்தடைந்தனர்.

அதில் வந்த ஒரு சிறுமி, பச்சிளம் குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள்.  

ஆப்கானில் இருந்து தப்பி வந்த சிறுமி- பிஞ்சு குழந்தையை கொஞ்சி மகிழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம் | Afghanisthan Girl Kissed Baby And Enjoy In India