பொது இடங்களில் பெண்கள் முகத்தை மறைக்க வேண்டும்..இல்லை என்றால் ஆண்கள் கைது - தாலிபான்கள் உத்தரவு..!

Afghanistan
By Thahir May 07, 2022 11:01 PM GMT
Report

வீட்டுக்கு வெளியே செல்லும்போது, பொது இடங்களில் பெண்கள் முகத்தை துணியால் மறைக்க வேண்டும். இல்லாவிட்டால் குடும்ப ஆண்கள் கைது செய்யப்படுவர்; அவர்கள் அரசுப் பணியில் இருந்து நீக்கப்படுவர்' என, ஆப்கானிஸ்தானில் ஆளும் தலிபான் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது.

கட்டுப்பாடுகள்தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானின் நிர்வாகத்தை, தலிபான் பயங்கரவாத அமைப்பு கடந்தாண்டு ஆகஸ்டில் கைப்பற்றியது.

அது முதல், அங்கு பெண்களுக்கு பல்வேறு கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.ஆண் துணையில்லாமல் பெண்கள் வெளியே செல்ல தடை; பள்ளிக்கு செல்ல தடை என, பல்வேறு கட்டுப்பாடுகளை தலிபான் விதித்து வருகிறது.

இந்நிலையில், அங்கு அமைந்துள்ள தற்காலிக அரசின் ஒழுக்க பராமரிப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், நேற்று கூறியதாவது:

பொது இடங்களில், பெண்கள் முகத்தை மறைக்கும் வகையிலான ஆடைகளை அணிய வேண்டும். முழு உடலையும் மறைக்கும் பர்தா அணிவது சிறந்தது.

கட்டாயம்இந்த விதிகளை பெண்கள் மீறினால், அவர்களுடைய தந்தை அல்லது நெருங்கிய ஆண் உறவினர் கைது செய்யப்பட்டு, அரசுப் பணியில் இருந்து நீக்கப்படுவார்.

இந்த உத்தரவை கட்டாயம் கடைப்பிடிக்க, தலிபான் தலைவர் ஹிபாதுல்லா அகுந்த்ஜடா உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.