போர் முடிவுக்கு வந்துவிட்டது: தலிபான்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்ததாக தலிபான்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் விலகிக் கொள்ளப்பட்டதை தொடர்ந்து தலிபான்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.
கடந்த சில நாட்களாக அரசுப் படைகளை தோற்கடித்து முக்கிய நகரங்களை கைப்பற்றியும் வந்தனர்.
இந்நிலையில் நேற்று தலைநகரான காபூலை கைப்பற்றினர், இதற்கு முன்னதாகவே அதிபராக பதவி வகித்து வந்த அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறியதாக கூறப்பட்டது.
தற்போது கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வந்த போர் முடிவுக்கு வந்துவிட்டதாக தலிபான்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இதற்கிடையே பேஸ்புக்கில் அஷ்ரப் கனி, போரில் மக்கள் ரத்தம் சிந்துவதை தவிர்க்கவே அதிபர் பதவியிலிருந்து விலகினேன்.
எனக்கு மக்களின் நலனே முக்கியம், இனிமேல் நாட்டை காப்பாற்றுவது தலிபான்களின் பொறுப்பு என பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.