தாலிபான்களுக்கு எதிராக போராடும் ஆப்கானிஸ்தான் பெண்கள்

Protest Afghanistan Taliban Womens
By Thahir Aug 17, 2021 01:43 PM GMT
Report

ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் முழுவதும் கைப்பற்றியுள்ள நிலையில் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில் தாலிபான்கள் பெண்கள் கல்வி கற்க,வேலைக்கு செல்ல,அவர்கள் சுதந்திரமாக நடந்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என அறிவித்திருந்தனர்.

இதனையடுத்து இன்று காபூலை சேர்ந்த 4 பெண்கள் தங்கள் அலுவலகத்திற்கு வெளியே தாங்கள் உரிமைக்காக வேலைக்கு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்ற அடையாளங்களுடன் போராட்டத்தில் இறங்கினர்.

தாலிபான்களுக்கு எதிராக போராடும் ஆப்கானிஸ்தான் பெண்கள் | Afghanistan Taliban Womens Protest Viral

அது அவர்களுக்கு அல்லாஹ்வும் நபியும் கொடுத்த உரிமை என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தில் பங்கேற்றனர்.அவர்கள் தாலிபான்கள் முன்பு எந்த அச்சமும் இன்றி போராடினர்.

தாலிபான்கள் பெண்கள் உரிமை பறிக்கப்படாது என குறிப்பிட்டிருந்த நிலையில் அந்நாட்டு பெண்கள் தங்கள் உரிமைக்காக தெருவில் இறங்கி போராடிய வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.