ஆப்கானில் வீடு புகுந்து இளம் பெண்களை கடத்தும் தாலிபான்கள் - வெளியான அதிர்ச்சி தகவல்
தலிபான்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று திருமணமாகாத பெண்களை கடத்தி செல்ல தொடங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணும் திரும்ப பெறப்பட்ட நிலையில் அந்நாட்டை தாலிபான்கள் கைப்பற்றினர்.
இதனால் அங்கு வசிக்க கூடிய வெளிநாட்டு வாழ் மக்கள் மட்டுமின்றி அந்நாட்டு மக்களும் ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேற முயன்று வருகின்றனர்.

இதனால் அந்நாட்டு காபூல் விமான நிலையம் பரபரப்பாக காணப்படுகிறது.இந்நிலையில் தாலிபான்கள் அங்கு பெண்களை வேலை மற்றும கல்வி கற்க அனுமதிக்கப்படுவார்கள் என அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் ஹாசாரா இன மக்களை தாலிபான்கள் தாக்குவதாகவும் அவர்களின் இல்லங்களை தீயிட்டு கொளுத்துவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் அங்கு வீட்டில் இருக்க கூடிய இளம் பெண்களை வீடு புகுந்து தாலிபான்கள் கடத்தி செல்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.