தாலிபான்களின் வாட்சப் கணக்குகள் முடக்கம்

Afghanistan Whatsapp Ban Taliban
By Thahir Aug 18, 2021 12:22 PM GMT
Report

தாலிபான்களின் வாட்சப் கணக்குகள் முடக்கப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், தாலிபான்களின் பேஸ்புக் கணக்குகளை தொடர்ந்து வாட்சப் கணக்குகளையும் முடக்கப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க சட்டப்படி, தாலிபான்கள் பயங்கரவாத அமைப்பினர் என்பதால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பேஸ்புக் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. தாலிபான்களுக்கு ஆதரவாக உள்ளவர்களின் கணக்குகளும் முடக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

தாலிபான்களின் வாட்சப் கணக்குகள் முடக்கம் | Afghanistan Taliban Whatsapp Ban

இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளதாவது, "அமெரிக்க சட்டத்தின் கீழ் தலிபான் பயங்கரவாத அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது மற்றும் எங்கள் ஆபத்தான நிறுவனக் கொள்கைகளின் கீழ் எங்கள் சேவைகளைத் தடை செய்துள்ளோம்.

இதன் பொருள் தாலிபான்கள் அல்லது சார்பாக பராமரிக்கப்படும் கணக்குகளை நாங்கள் அகற்றி, அவர்களைப் புகழ்வது, ஆதரிப்பது மற்றும் பிரதிநிதித்துவம் செய்வதைத் தடைசெய்கிறோம்" என்று தெரிவித்துள்ளது.