ஆப்கானிஸ்தானில் ஆயுதங்கள் விற்பனை படு ஜோர் - துப்பாக்கிகள் வாங்க மக்கள் ஆர்வம்
Afghanistan
Peoples
Taliban
Weapons
By Thahir
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் அந்நாட்டை தாலிபான்கள் கைப்பற்றினர்.
இதையடுத்து அங்கு நாளுக்கு நாள் பரபரப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதில் இருந்து ஆப்கானிஸ்தானில் ஆயுதங்களை விற்பனை செய்யும் கடைகள் அதிகரித்துள்ளன.

கந்தஹார் மாநிலத்தில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை விற்கும் கடைகளுக்கு வரவேற்பு கிடைத்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
தலிபான்களும், பொதுமக்களும் ஆயுதங்களை வாங்குவதாக தெரிவிக்கின்றனர். சீனா மற்றும் ரஷ்யாவில் தயாரான துப்பாக்கிகள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. அரசு படைகள் விட்டுச் சென்ற ஆயுதங்களையும் எடுத்து விற்பனை செய்கின்றனர்.