குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் தவிக்கும் 1 கோடி குழந்தைகள் - யுனிசெஃப் ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

Child Water Afghanistan Taliban Unicef
By Thahir Sep 19, 2021 05:30 AM GMT
Report

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். இதனால் அங்கு பல்வேறு பிரச்சனைகள் எழுந்து வருகின்றன.

பெரும்பாலான இடங்களில் தாலிபான்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், போதிய உணவு, மருந்து, குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகளின்றி 5 வயதுக்கு உட்பட்ட 1 கோடி குழந்தைகள் தவித்து வருவதாக யுனிசெப் அமைப்பு அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளது.

குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் தவிக்கும் 1 கோடி குழந்தைகள் - யுனிசெஃப் ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல் | Afghanistan Taliban Unicef Water Child

இதுகுறித்து யுனிசெப் அமைப்பின் தலைமை தொடர்பு அதிகாரி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆப்கானிஸ்தானில் அடிப்படை வசதிகள் போதிய அளவில் கிடைக்காத சூழலில் பல குழந்தைகள் தேவையான அளவு உணவும் , ஊட்டச்சத்தும் கிடைக்காமல் திண்டாடி வருகின்றன.

அவர்களுக்கு மனிதநேய உதவி அளிக்க வேண்டிய அவசர தேவை உள்ளது. வறட்சியால் குடிநீர் கூட கிடைக்கவில்லை என்பது தான் மிக வேதனையான விஷயம்.

தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு இந்த நிலை மேலும் அதிகரித்து உள்ளதாக அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளார்.