துப்பாக்கி குண்டுகளுக்கு மத்தியில் துணிச்சலாக செய்தி வழங்கிய பெண் செய்தியாளர்- வைரலாகும் வீடியோ

Afghanistan Viral Video Taliban Sumaira Khan Reporter
By Thahir Aug 23, 2021 09:05 AM GMT
Report

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தனது படைகளை திரும்ப பெற்றதால் தாலிபான்கள் அந்நாட்டை கைப்பற்றினர்.

இச்சம்பவத்தால் அந்நாட்டு மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேற காபூல் விமான நிலையத்தில் விமானத்தில் தொங்கிய படி பயணம் செய்த காட்சிகள் உலக நாடுகளின் தலைப்பு செய்திகளாக மாறின.

இந்நிலையில் ஆப்கான் நாட்டின் சூழல் குறித்து உலக நாடுகள் உண்ணிப்பாக கவனித்து வருகின்றனர்.இதனால் சர்வதேச ஊடக செய்தியாளர்கள் அந்நாட்டில் முகாமிட்டுள்ளனர்.

அங்கு நடக்கும் சம்பவங்கள் குறித்து தாலிபான்களின் செயல்கள் குறித்தும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றனர்.

துப்பாக்கி குண்டுகளுக்கு மத்தியில் துணிச்சலாக செய்தி வழங்கிய பெண் செய்தியாளர்- வைரலாகும் வீடியோ | Afghanistan Taliban Sumaira Khan Viral Video

இந்த நிலையில் இண்டுஸ் டாட் நியூஸ் சேனலை சேர்ந்த செய்தியாளர் சுமைரா கான் என்ற பெண் செய்திகளை வழங்கி கொண்டு இருந்தார்.

அப்போது தாலிபான்கள் துப்பாக்கி சூடு நடத்துகின்றனர்.இதை கண்டு அங்கு கூடியிருந்த மக்கள் அஞ்சி ஓட்டம் பிடிக்கின்றனர்.ஆனால் பெண் செய்தியாளர் சுமைரா கான் எதற்கும் அஞ்சாமல் செய்திகளை வழங்கி வந்தார்.

இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.