தாலிபான்களை புகழ்ந்து தள்ளும் பிரபல பாக் கிரிக்கெட் வீரர்

Afghanistan Shahid Afridi Taliban
By Thahir Aug 31, 2021 06:00 AM GMT
Report

ஆப்கானிஸ்தான் முழுவதும் தாலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள நிலையில் காபூல் விமான நிலையம் முழுவதும் அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

இந்நிலையில் நள்ளிரவில் இருந்து அமெரிக்கா படைகள் முழுவதுமாக வெளியேறியது.மேலும் அங்குள்ள அமெரிக்கா படையைச் சேர்ந்த வீரர்களை வெளியேறுமாறு அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

இதை தொடர்ந்து தாலிபான்கள் ஆப்கானில் உள்ள பெண்களுக்கு கட்டுபாடுகளை விதித்து வருகின்றனர்.அதில் அவர்கள் நம் நாட்டில் ஷரியத் சட்டம் முழுமையாக கடைப்பிடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

அதன் பெண்கள் பெண்கள் ஜீன்ஸ் அணியக் கூடாது என தடை விதித்துள்ளனர். அதோடு, பெண்கள் கை விரல்களில் நெயில் பாலிஷ் பயன்படுத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில் பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிதி ஊடகங்களுக்கு ஒரு அதிர்ச்சியூட்டும் அறிக்கையை வெளியிட்டார்.

தாலிபான்களை புகழ்ந்து தள்ளும் பிரபல பாக் கிரிக்கெட் வீரர் | Afghanistan Taliban Shahid Afridi

அதில் அவர்,சமீபத்தில் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய தாலிபான்கள், நேர்மறையான எண்ணத்துடன் கைப்பற்றியதாகவும், பெண்கள் பணி செய்ய அவர்கள் அனுமதித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

தாலிபான் பெண்கள் வேலை செய்ய அனுமதித்துள்ளதோடு, கிரிக்கெட் விளையாட்டையும், பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடரையும் நடத்த தாலிபான் ஆதரவளித்துள்ளதாகவும் பாராட்டியுள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் புகழ்ந்து பேசியுள்ளார்.

அவரது அதிர்ச்சி தரும் வீடியோவை ட்விட்டரில் பதிவேற்றம் செய்த ஒருவர் அடுத்த தாலிபான் தலைவராக ஷாஹித் அப்ரிதி வர வாய்ப்பு உள்ளது என கருத்து தெரிவித்துள்ளார்.