ஆப்கானில் போராட்டங்களை படம் பிடித்த பத்திரிகையாளர்கள் மீது தாலிபான்கள் கொடூரத் தாக்குதல் : வெளியான புகைப்படங்கள்

attack journalist afghanistan taliban
By Irumporai Sep 09, 2021 07:01 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

ஆப்கானில் தாலிபான்களுக்கு எதிராக போராடிய பெண்களின் போராட்டங்களை பதிவு செய்த பத்திரிகையாளர்களைத் தாலிபான்கள் கடுமையாகத் தாக்கிய புகைப்படம் வெளியாகியுள்ளது.

தாலிபான்களுக்கு ஆதரவாக உள்ள பாகிஸ்தான் உளவு அமைப்புகளைக் கண்டித்து, காபூலில் இளம்பெண்கள் போராட்டம் நடத்தினர். பெண்களின் இந்தப் போராட்டங்களைப் பதிவு செய்த பத்திரிகையாளர்கள் தாலிபான்களால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கும் புகைப்படங்கள் வெளியானது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எடிலாட் ராஸ் என்ற பத்திரிகையைச் சேர்ந்த நிமத் நக்தி , தகி என்ற இரு பத்திரிகையாளர்களும் தலிபான்களால் கைது செய்யப்பட்டு கொடூரமாகத் தாக்கப்பட்டதாக ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் குறித்து அவர்கள் கூறும்போது, நாங்கள் பத்திரிகையாளர்கள் என்று அவர்களிடம் கூறினோம். ஆனால், அவர்கள் கேட்கவில்லை. அவர்கள் எங்களைக் கொன்றுவிடுவார்கள் என்றே நினைத்தோம் என்று தெரிவித்துள்ளனர். ஆப்கான் தலை நகர் காபூலை தாலிபன்கள் கைபற்றிய போது பத்திரிகைகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்படும் என்று தாலிபான்கள் உறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.