தாலிபான்கள் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் நிலைமை சீராக உள்ளது - ரஷ்யா
அஷ்ரப் கனியைவிட தலிபான்களின் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தானின் நிலைமை சிறப்பாக உள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.
ஆப்கனிஸ்தானுக்கான ரஷ்ய தூதர் டிமிட்ரி ஜிர்னோவ் திங்களன்று எக்கோ மாஸ்க்வி வானொலியில் நேரடி ஒளிபரப்பில் பேசினார்.
அப்போது, 'ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல், அதிபர் அஷ்ரப் கனியின் ஆட்சியைவிட தலிபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் நிலைமை சிறப்பாக இருந்தது என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தலிபான்களின் கீழ் உள்ள முதல்நாளிலேயே என்னாலும் இதனைக் கூற முடியும். அஷ்ரப் கனியின் கீழ் இருந்ததை விட தலிபான் பயங்கரவாதிகளின் கீழ் காபூல் நிலைமை சிறப்பாக உள்ளது. காபூலில் நிலைமை அமைதியானது.
தலிபான் பிரிவுகள் தலைநகருக்குள் நுழைந்து, ஆப்கன் அரசையும் அமெரிக்கப் படைகளையும் நாட்டை ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டன. இதனால் அஷ்ரப் கனி தப்பித்துச் சென்றுவிட்டார். இது இழிவான செயல்.
100க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட ரஷ்யா தூதரகம் தற்போது தாலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. ரஷிய அதிகாரிகளை மீட்பது குறித்து செவ்வாய்க்கிழமை தாலிபான்களுடன் விரிவான பாதுகாப்புப் பேச்சுவார்த்தை நடத்தியவிருக்கிறேன்.
முந்தைய ஒப்பந்தங்களின்படி, ரஷ்யா தூதரக அதிகாரிகளின் பாதுகாப்புக்கு தாலிபான்கள் உறுதி அளித்துள்ளனர் என்றார்.