ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தை கைப்பற்றியது தாலிபான் அமைப்பு
Parliament
Afghanistan
Taliban
By Thahir
ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தையும் தhலிபான் அமைப்பு கைப்பற்றியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் அனைத்து நகரங்களையும் கைப்பற்றிய பிறகு, தலைநகரான காபூலையும் தாலிபான்கள் கைப்பற்றியுள்ளதால் ஒட்டு மொத்த நாடும் அவர்களின் ஆட்சிக்கு கீழ் வந்துள்ளது.
இதனையடுத்து அதிபர் அஷ்ரப் கானி நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தான் நாட்டின் அதிகாரம் தாலிபான்கள் கையில் சென்றிருக்கிறது.

இந்நிலையில் சுமார் 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்திய அரசால் கட்டப்பட்ட ஆப்கானிஸ்தான் நாடாளுமன்ற கட்டிடத்தை சில ஆண்டுகளுக்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.