செய்தி நிறுவனங்களை தாலிபான்கள் மூட உள்ளனர் - பத்திரிக்கையாளர் எச்சரிக்கை

Afghanistan Shut down Journalist Talibans News Channel
By Thahir Aug 28, 2021 06:16 AM GMT
Report

ஆப்கானிஸ்தானில் உள்ள ஊடக நிறுவனங்களை தாலிபான்கள் மூடிவிடுவார்கள் என்றும் பத்திரிகையாளர்கள் சுதந்திரமாக இயங்க அனுமதிக்கப்படுவார்கள் என பொய்யான உறுதிமொழி அளித்துவிட்டு மேற்கத்திய நாடுகளை அவர்கள் ஏமாற்றிவருவதாக ஆப்கான் புதைப்பட பத்திரிகையாளர் மசூத் ஹொசைனி குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு, சிறந்து விளங்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் புலிட்சர் விருது ஏஜென்ஸ் பிரான்ஸ்-பிரஸ் நிறுவனத்திற்காக பணியாற்றிய மசூத் ஹொசைனிக்கு வழங்கப்பட்டது.

குறிப்பாக, பெண் பத்திரிகையாளர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது, ஃப்ரீலான்ஸராக பணியாற்றிவரும் ஹொசைனி, தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய அந்த நாளே காபூலிலிருந்து விமானம் மூலம் வெளியேறிவிட்டார்.

செய்தி நிறுவனங்களை தாலிபான்கள் மூட உள்ளனர் - பத்திரிக்கையாளர் எச்சரிக்கை | Afghanistan Taliban News Channel Reporter

ஆப்கானிஸ்தானில் இயங்கும் ஊடகத்தின் எதிர்காலம் குறித்து கவலை தெரிவித்துள்ள ஹொசைனி, "நிலைமை மிகவும் மோசமாக மாறவுள்ளது. ஊடகத்தை ஒடுக்க அவர் முயற்சி செய்கிறார்கள்.

ஆனால், அதனை மெதுவாக செய்கிறார்கள். முதலில் தலிரான்கள் ஒருவரை பிடிப்பார்கள். பின்னர், தான் கொலை செய்வார்கள். இதுதான், தற்போது ஊடகத்திற்கு நடைபெற்றுவருகிறது.

தாலிபான்கள் ஊடகத்தை முழுவதுமாக மூடிவிடுவார்கள். இணையத்தையும் முழுவதுமாக முடக்கிவிடுவார்கள். இப்பகுதியின் மற்றொரு வட கொரியாவாக ஆப்கானிஸ்தான் மாறிவிடும்" என்றார்.

பெண்கள், சிறுமிகள் ஆகியோரை தாலிபான்கள் வலுக்கட்டாயமாக திருமணம் செய்துகொள்வது குறித்த சிறப்பு செய்தியை வெளிநாட்டு பத்திரிகையாளருடன் இணைந்து ஹொசைனி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.